உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் மலர் கண்காட்சி கோடை விழா: மே 17ல் துவக்கம்

கொடையில் மலர் கண்காட்சி கோடை விழா: மே 17ல் துவக்கம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி, கோடைவிழா மே 17ல் தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடக்கும் இவ்விழாவில் மே 17 முதல் மே 26 வரை 10 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. தினமும் பல்வேறு பாரம்பரிய, கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கொடைக்கானல் என்ற முகவரியில் நேரிலோ, 04542- - 241 675,91769 95867 என்ற எண்கள் வாயிலாகவும், கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை 90928 61549 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி