இலவச மருத்துவ முகாம்
ஒட்டன்சத்திரம்,: திண்டுக்கல், சிவகங்கை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, காரைக்குடி ரோட்டரி கிளப், செட்டி நாடு குமாரராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை சார்பாக பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.டாக்டர்கள் ஆசைத்தம்பி, முகமது அஜீம், மீனா முத்தையா மருத்துவமனை மருத்துவர் குழுவினர் பக்தர்களுக்கு இலவச சிகிச்சை , ஆலோசனைகளை வழங்கினர். 500க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ரெட் கிராஸ் துணை சேர்மன் முத்துப்பாண்டி, செயலாளர் ஆனந்த் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, ஆறுமுகம் ஒட்டன்சத்திரம் சக்தி கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர் அன்னபூரணி பங்கேற்றனர்.