உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாராஹி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை

வாராஹி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி பவுர்ணமி யொட்டி உலக நன்மை வேண்டி யாக பூஜை ,லட்சார்ச்சனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.இதையொட்டி வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை , லட்சார்ச்சனை, தீபாராதனை நடந்தது. உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்வாரிலிருந்து வந்திருந்த 9 குருமார்கள் குரு வணக்கம் செலுத்தி பூஜை செய்தனர். பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள், திண்டுக்கல் குமாரசாமி குருக்கள் குழுவினர் பூஜைகளை நடத்தினர். யாக பூஜையில் வரசித்தி வாராஹி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி