உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இறந்த பசு மாட்டிற்கு மாலையிட்டு இறுதிச்சடங்கு

இறந்த பசு மாட்டிற்கு மாலையிட்டு இறுதிச்சடங்கு

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே விவசாயி வளர்த்த பசு மாடு இறந்ததால் ஊருக்கே அழைப்பு விட்டுமாலையிட்டு தேங்காய் பழம் உடைத்து வணங்கி நல்லடக்கம் செய்தார் .குஜிலியம்பாறை அருகே கோமுட்டிபட்டியை சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி 51. இவர்களுக்கு 24 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மகனுக்கு கண்ணன் என பெயர் வைத்தனர். மகனின் பால் தேவைக்காக ஒரு பசு மாட்டை வாங்கினர். ஆனால் கண்ணனால் வாய் பேச முடியவில்லை.அதிர்ச்சி அடைந்த விவசாயி, தான் வளர்த்து வந்த அந்த பசு மாடு, கன்று , கண்ணனுடன் கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோயில் சென்று, தனது மகன் வாய் பேச வேண்டிக் கொண்டு ஊர் திரும்பினார். ஒரு சில ஆண்டுகளில் கண்ணன் வாய் பேச துவங்கினாார்.இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோயிலுக்கு, பசு மாடுடன் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். இதனால் பசு மாடு பொதி மாடாக (சாமி மாடாக) ஆனது.இந்த மாடு நேற்று முன்தினம் இரவு 1:30 மணிக்கு இறந்தது. உற்றார், உறவினர், ஊரில் உள்ள நண்பர்களுக்கு தகவல் கூறி, பசு மாட்டிற்கு அலங்காரம் செய்து, பூ மாலையிட்டு சடங்கு செய்தப்படி நேற்று மாலை நல்லடக்கம் செய்தனர். இதற்கு வந்தவர்களும் தேங்காய் பலத்துடன் வந்து அபிஷேகம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ