| ADDED : ஆக 16, 2024 05:17 AM
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று பொது மக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டனர்.சாணார்பட்டி திம்மணநல்லுார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் கவிதா தர்மராஜன் தலைமையில் நடந்தது. கோம்பைப்பட்டி ஊராட்சியில் தலைவர் தமிழரசி கார்த்தியைசாமி தலைமையிலும், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சியில் தலைவர் தேவி ராஜா சீனிவாசன் தலைமையிலும், வேம்பார்பட்டி ஊராட்சியில் தலைவர் கந்தசாமி தலைமையிலும், செங்குறிச்சியில் தலைவர் மணிமாறன் தலைமையிலும், ராஜக்காபட்டியில் தலைவர் பராசக்தி முருகேசன் தலைமையிலும், கணவாய்பட்டி ஊராட்சியில் தலைவர் நிஷா ராமகிருஷ்ணன் தலைமையிலும், எமக்கலாபுரம் ஊராட்சியில் தலைவர் சுரேஷ் தலைமையிலும், கம்பிளியம்பட்டி ஊராட்சியில் தலைவர் விஜயா வீராச்சாமி தலைமையிலும், கூவனுாத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி சத்யராஜ் தலைமையிலும் நடந்தது.நத்தம்: நத்தம் வேலம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது. சிறுகுடியில் தலைவர் கோகிலவாணி வீரராகவன் தலைமையிலும், செந்துறையில் தலைவர் சபரி முத்து தலைமையிலும், குடகிபட்டியில் தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி தலைமையிலும், சமுத்திராபட்டியில் தலைவர் அமராவதி தலைமையிலும், பிள்ளையார்நத்தத்தில் தலைவர் தேன்மொழி முருகன் தலைமையிலும் கூட்டம் நடந்தது.பழநி: பழநி ஒன்றிய கோதைமங்கலம் ஊராட்சியில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பழநி ஒன்றிய குழு தலைவர் ஈஸ்வரி, ஊராட்சி தலைவர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், சிவகிரிபட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சித் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அசோசியேசன் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அமைப்பாளர் சரவணசாமி பங்கேற்றனர். அயோடின் கலந்த உப்பை கண்டுபிடிக்கும் செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது.