உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியை கைது

உதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியை கைது

நெய்க்காரப்பட்டி: ஆதி திராவிடர் விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகையில் முறைகேடு செய்ததாக திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நெய்க்காரப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா 54, கைது செய்யப்பட்டார்.நெய்க்காரப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 2010 முதல் 2020 வரை தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகையில் ரூ. 6 லட்சத்தை அவர் முறைகேடு செய்தது பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி பழநி தாலுகா போலீசார் விசாரித்து விஜயாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ