உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கணவர் கத்தியால் குத்தி கொலை ; மனைவி கைது

கணவர் கத்தியால் குத்தி கொலை ; மனைவி கைது

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் குடும்ப தகராறில் ஆத்திரத்தில் கணவரை குத்தி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் முருகபவனம் இந்திரா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன்50. இவரது மனைவி மோகனா தேவி 48. கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மது போதையில் இருந்த கண்ணன் மனைவி மோகனா தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த மோகனா தேவி கத்தியால் கணவரை மூன்று இடங்களில் குத்தி கொலை செய்தார்.மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா,எஸ்.ஐ., மலைச்சாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக மோகனாதேவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணன் கத்தியை கையிலே வைத்து கொண்டிருந்தார். கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு இறந்தார் என தெரிவித்தார். இதை நம்பாத போலீசார் மீண்டும் விசாரணை நடத்திய போது ஆத்திரத்தில் கணவர் கண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிந்தது. அதன்படி போலீசார் மோகனா தேவியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை