உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குரூப் 4 தேர்வில்- 12,466 பேர் ஆப்சென்ட்

குரூப் 4 தேர்வில்- 12,466 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 4 போட்டித்தேர்வில் 12,466 பேர் ஆப்சென்ட் ஆகினர்.திண்டுக்கல் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது. வட்டார வாரியாக ஆத்துாரியல் 18 மையங்களில் 4351 தேர்வர்கள், திண்டுக்கல் கிழக்கில் 48 மையங்களில் 12,733, திண்டுக்கல் மேற்கில் 36 மையங்களில் 9825, குஜிலியம்பாறையில் 7 மையங்களில் 1571, கொடைக்கானலில் 5 மையங்களில் 1124, நத்தத்தில் 10 மையங்களில் 2739, நிலக்கோட்டையில் 34 மையங்களில் 8896, ஒட்டன்சத்திரத்தில் 15 மையங்களில் 3976, பழநியில் 38 மையங்களில் 9958, வேடசந்துாரில் 17 மையங்களில் 4442 என மொத்தம் 228 மையங்களில் 59,615 பேர் தேர்வெழுத விண்ணப்பத்தனர். தேர்வு மையங்களை கண்காணிக்க 62 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. 47,149 நபர்கள் நேற்று தேர்வு எழுதினர். 12,466 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு எழுதியவர்களின் சதவீதம் 79.08. கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி,திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை மையங்களை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை