உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இரவு நேரத்தில் நாய் தொல்லையால் மக்கள் அச்சம்

பழநியில் இரவு நேரத்தில் நாய் தொல்லையால் மக்கள் அச்சம்

பழநி: பழநியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.பழநி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. தெரு நாய்களால் வாகன ஓட்டுநர்கள் அதிக சிரமம் அடைகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் செல்லும் பெண்கள், முதியவர்கள் குறுக்கே வரும் தெரு நாய்களால் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.இரவு நேரங்களில் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் சாலைகளில் நடந்து செல்லும் நபர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தைகள், முதியவர்களை தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்துகிறது.நோய் தொற்று ஏற்பட்டுள்ள நாய்களும் உலா வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு அடைவதுடன் மனிதர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. தெரு நாய் தொல்லைகள், நோய் தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொறுப்பு அரசு நிர்வாகத்திற்கு உள்ளது. இதன் மீது நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை