உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாய் குட்டி உடல் தான் நரபலி பீதி ஓய்ந்தது

நாய் குட்டி உடல் தான் நரபலி பீதி ஓய்ந்தது

கீரனுார்:பழநி அருகே தனியார் தோட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்டு மனித உடல் புதைக்கப்பட்டதாக மக்கள் அச்சமடைந்த நிலையில் , இதை நேற்று தோண்டியபோது இறந்த நாய் குட்டி உடல் புதைக்கப்பட்டது தெரிந்தது.பழநி கீரனுார் மேல்நிலைப்பட்டி பகுதியில் குமரவேல் 52, என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பூஜை செய்யப்பட்டு மனித உடல் புதைக்கப்பட்டது போன்ற தடயம் காணப்பட்டது. இதன் அருகே பள்ளி மாணவி சீருடையும் கிடந்தது. மனித உடல் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்களிடையே தகவல் பரவ அச்சமடைந்தனர். கீரனுார் போலீசார் பள்ளி சீருடை சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரித்ததோடு மாயமான மாணவிகள் குறித்தும் விபரம் சேகரித்தனர். இதனிடையே நேற்று அப்பகுதியில் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி பார்த்தபோது இறந்த நாய்குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேல்நிலைப்பட்டி அரசு பஸ் கண்டக்டர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் வளர்த்த நாய் இறந்த நிலையில் இவரது மகன்கள் பள்ளி மாணவியின் பழைய சீருடையில் நாய் உடலை எடுத்து வந்து புதைத்ததும், அதன் மீது பூக்களை போட்டு சென்றதும் தெரியவந்தது. நரபலி அச்சத்திலிருந்த அப்பகுதி மக்கள் ,போலீசார் இதனால் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை