| ADDED : ஜூன் 21, 2024 05:19 AM
நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகத்தில் 3வது நாளாக நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் பூங்கொடி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். நத்தம் குறு வட்டத்திற்கு உட்பட்ட சமுத்திராபட்டி, ஊராளிபட்டி, பூதகுடி, பண்ணுவார்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுமண்டலம், வேலம்பட்டி, நத்தம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடந்தது. நேற்று 5 மனுதாரர்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. ஏற்கனவே மனு அளித்த மனுதாரர்களின் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்படி 54 நபர்களுக்கு பட்டா 5 நபர்களுக்கு பட்டா உட்பிரிவு ஆணை, 23 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. 2 நாட்கள் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து அதில் 28 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கப்பட்டது. தாசில்தார் சுகந்தி, மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் பங்கேற்றனர்.