உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேரளாவில் ஓணம் ரத்தால் டல்லடிக்கும் மலர் சந்தை *ரூ.4 கோடி வர்த்தகம் பாதிப்பு

கேரளாவில் ஓணம் ரத்தால் டல்லடிக்கும் மலர் சந்தை *ரூ.4 கோடி வர்த்தகம் பாதிப்பு

நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு என, தனியாக பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு, வாடாமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட உடனே வாடாத மலர்கள், 800 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன. தற்போது இந்த பூக்கள் நன்கு விளைந்து, அறுவடை துவங்கியுள்ளது.ஆனால், கேரளாவில் வயநாடு நிலச்சரிவால், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால், பூக்களை கேரளாவிற்கு அனுப்ப முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். 2023ல் ஒரு கிலோ வாடாமல்லி, ரூ.150 முதல், 200 வரை விற்றது. தற்போது பூக்களை வாங்க கேரள வியாபாரிகள் வராததால், ஒரு கிலோ வாடாமல்லி, ரூ. 40 முதல், 60 வரை விற்பனையாகிறது.வழக்கமாக, ஓணம் பண்டிகைக்காக, நிலக்கோட்டை சந்தையில் இருந்து, 25 டன் பூக்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, இரண்டு டன் பூக்கள் கூட அனுப்பவில்லை என, பூ ஏற்றுமதியாளர்கள் கூறினர். இதனால், ரூ. 4 கோடிக்கு மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை