உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல் : முசுவனுாத்து அன்னை அறக்கட்டளை, நிலக்கோட்டை கணித மன்றம் சார்பில் திண்டுக்கல்லை சுற்றிய அனைத்து பள்ளிகளை சேர்ந்த 10, 11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.திண்டுக்கல் ஜான் பால் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் டேவிட்ராஜ் தலைமை வகித்தார் திட்ட இயக்குனர் காசிமாயன் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். கணித மன்ற தலைவர் பிச்சைநாதன், ஆசிரியர்கள் குயிலன், விஜய் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக ஜி.டி.என்., கலைக்கல்லுாரி பேராசிரியர் முருகானந்தம், கலெக்டரின் தனி அலுவலர் சரவணக்குமார், பேராசிரியர் மகேந்திர பாண்டியன் பங்கேற்றனர். சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை