வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தயாரிப்பு நிறுத்த வேண்டும் என்று ஒருத்தனும் சொல்வதில்லை ...ஏன்
தமிழ்நாடு புகைபிடித்தல், புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தடுப்பு சட்டம் 200-2-03 தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இந்திய குடியரசு தலைவரால் 2003 பிப்ரவரியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் விதி 1 முதல் 3 -ன் படி பொது இடங்களில் புகைப்பிடித்தலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தலோ தண்டனைக்குரிய குற்றமாகும். விதி 11ன் படி அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலர்களின் திடீர் ஆய்வின்போது, மேற்கண்ட குற்றங்கள் கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக ரூ.100 வசூலிக்கப்படும்.இவ்வாறு சட்டம் இருப்பது குறித்து துண்டுபிரசுரங்களை சுகாதார துறையினர் எப்போதாவது பொதுமக்களிடம் வினியோகிப்பர். சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து அபராத நடவடிக்கைகளிலும் இறங்குவதையும் எப்போதாவது பார்க்கலாம். ஆனால் களத்தில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லை. புகைப்பவரை காட்டிலும் உடன் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றனர். இதனாலே ஆண்டுதோறும் மே 31 ல் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது . பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்களிடம் மாற்றம் ஏற்படும்.
தயாரிப்பு நிறுத்த வேண்டும் என்று ஒருத்தனும் சொல்வதில்லை ...ஏன்