உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணம் கையாடலை கவனிக்காத கண்காணிப்பாளருக்கு மெமோ

பணம் கையாடலை கவனிக்காத கண்காணிப்பாளருக்கு மெமோ

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த இளநிலை உதவியாளரை கண்டுபிடிக்காமல் இருந்த கண்காணிப்பாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் 'மெமோ'வழங்கியது. திண்டுக்கல் மாநகராட்சியில் வரி செலுத்தும் பிரிவு செயல்படுகிறது. இங்கு கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றிய சரவணன் வங்கியில் செலுத்த எடுத்த சென்றரூ.2 லட்சத்தை கையாடல் செய்தார். இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் தினமும் கணக்குபிரிவில் பெறப்படும் பணம் முறையாக வங்கியில் செலுத்தப்படுகிறதா என கண்காணிப்பாளர் சாந்தி கண்காணிக்க வேண்டும். இவர் ஒரு மாதமாக முறையாக கவனிக்காமல் இருந்ததால் தான் இச்சம்பவம் நடந்ததாக கூறி மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பாளர் சாந்திக்கு மொமோ வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை