உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரவில் பஸ் ஸ்டாண்ட் பயணிகளிடம் அலைபேசிகளை குறிவைக்கும் கும்பல்

இரவில் பஸ் ஸ்டாண்ட் பயணிகளிடம் அலைபேசிகளை குறிவைக்கும் கும்பல்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அசந்த நேரத்தில் அலைபேசிகளை குறிவைத்து அபேஸ் செய்ய கும்பல் ஒன்று களமிறங்கியுள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தினமும் 100க்கு மேலான பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பஸ்கள் இங்கே வருகிறது. இரவு நேரத்தில் இளம்பெண்கள் முதல் ஏராளமான பயணிகள் வெளியூருக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து கண் அசருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தும் கும்பல் பயணிகளின் அலைபேசிகளை அபேஸ் செய்கின்றனர். கண்விழித்து பார்க்கும் பயணிகள் அலைபேசியை பறிகொடுத்ததை தெரிந்தபின் போலீசாரை தேடுகின்றனர். போலீஸ் பூத்கள் பஸ் ஸ்டாண்டில் இருந்தபோதிலும் போலீசார் இருப்பதில்லை . இதனால் அருகிலிருக்கும் போக்குவரத்து அதிகாரிகளை நாடுகின்றனர். அவர்களோ வேறு வழியின்றி ஆறுதல் கூறி அனுப்புகின்றனர். இச்சம்பவங்களில் சிறுவர்கள் தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஆடம்பர வாழ்க்கை மீது ஆசை பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீசார்தான் இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெங்கிடாஜலபதி,இன்ஸ்பெக்டர்,திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அடிக்கடி குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை