உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் மாமியார் வெட்டிக்கொலை

பழநியில் மாமியார் வெட்டிக்கொலை

பழநி: பழநி கலிக்கநாயக்கன்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமியாரை வெட்டி கொலை செய்தார்.பழநி கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சித்ரா 45. இவரது மகள் நிவேதா 26, இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் மேலுார் கொடுக்கம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் 34 என்பவருடன் திருமணம் நடந்தது. நிவேதா, ஜெயபால் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சில மாதங்களாக தம்பதியர் இடையே குடும்ப பிரச்னை இருந்தது. இதுகுறித்து பழநியில் நிவேதா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். நேற்று மாலை பழநி கலிக்கநாயக்கன் பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்த ஜெயபால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜெயபால் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சித்ரா ,நிவேதாவை வெட்டினார். பின் அங்கிருந்து தப்பினார். சித்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார். நிவேதா பலத்த காயத்தில் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். பழநி டவுன் போலீசார்ஜெயபாலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை