உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோர மணல்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்...

ரோட்டோர மணல்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்...

பெயர் பலகையால் தடுமாற்றம்திண்டுக்கல் தாலுகா ஆபிஸ் ரோடு மவுன்ஸ்புரம் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை சேதமடைந்துள்ளது. இதனால் பாதை தெரியாமல் வாகன ஓட்டிகள் வேறு பாதையில் சுத்தி செல்கின்றனர். புதிய பெயர் பலகை அமைக்க வேண்டும். சின்னதம்பி, திண்டுக்கல்.--------ரோட்டோர மணலால் அவதிஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி சர்வீஸ் ரோட்டில் மணல் மேவி உள்ளதால் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டூ வீலரில் செல்வோர் மணலில் தடுமாறி கீழே விழுகின்றனர். மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிமாறன், ஒட்டன்சத்திரம்.---------ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளம்காணப்பாடி குப்பமுத்துபட்டி வாங்கலாயி சமுத்திரம் குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சிலர் தன்னிச்சையாக பள்ளம் தோண்டி ரோடு அமைத்துள்ளனர். இதனால் நீர்பிடிப்பு பகுதியின் அளவு குறைகிறது. இதை கண்காணிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். முருகன், வடமதுரை.----------விபத்தை ஏற்படுத்தும் அடிகுழாய்திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் ரோடு அமைக்கும் பணியின் போது அடி குழாய் ஒன்று மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பயன்பாடின்றி உள்ள அடிகுழாயை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவேக், திண்டுக்கல்.-----------மக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்திண்டுக்கல் அறிவு திருக்கோயில் ரோட்டில் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அருகே செல்வோரும் எந்நேரமும் அச்சத்துடனே செல்கின்றனர். மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.மதுரைவீரன், திண்டுக்கல்.-----------குப்பையால் உருவாகும் சீர்கேடுதிண்டுக்கல்- திருச்சி ரோட்டில் பல நாட்களாக குப்பை அல்லாமல் உள்ளதால் மலை போல் குவிந்துள்ளது. அதிலுள்ள பிளாஸ்டிக் கலந்த குப்பை காற்றில் தாறுமாறாக ரோட்டில் பறக்கிறது. இதனால் சுற்றுசூழல் பாதித்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும். ஈஸ்வரன்,திண்டுக்கல்.------------தொற்று பரப்பும் கழிவுநீர்திண்டுக்கல் குள்ளனம்பட்டி ரோட்டில் சாக்கடை கால்வாயில் குப்பையை கொட்டுவதால் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தொற்று பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மக்களும் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. கால்வாயை துார்வார வேண்டும். செல்வன், குள்ளனம்பட்டி.-----------.............................................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி