உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நத்தம்: நத்தம் அருகே புதுக்கோட்டை முத்தாலம்மன், செல்வகணபதி, பாலசுப்பிரமணியர், பாதக்கருப்பு, பெரியகருப்பு, சின்னக்கருப்பு, நொண்டிசுவாமி கோயில் கும்பாபிஷேகம்விழா முதல் நாளில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மூலமந்திர ஹோமம் முதல் காலயாக பூஜைகள் நடந்தது. நேற்று 2ம், 3ம், 4ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தகுடங்கள் கோபுர உச்சிக்கு எடுத்து செல்ல , சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிேஷகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தம் பூஜை மலர்கள் ,அன்னதானம் வழங்கப்பட்டது.திண்டுக்கல் கலிங்கப்பட்டி செல்வ விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் , முளைப்பாரி ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர்பூஜை, மஹா கணபதி ஹோமம் என பல்வேறு ஹோம பூஜைகள் நடந்தது.நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடர்கள் வானத்தில் வட்டமிட அதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை