உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா

முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நிலக்கோட்டை முசுவனுாத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடந்தது.திண்டுக்கல் நிலக்கோட்டை, முசுவனுாத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா ஏப்.30ல் அம்மன் எழுந்தருளல் நிகழ்வுடன் துவங்கியது. மூன்று நாள் விழாவான நேற்று முன்தினம் அம்மன் முத்து பல்லாக்கில் பவனி , அக்னி சட்டி, பொங்கல், ஊஞ்சல் உற்ஸவம் என நிகழ்ச்சி நடந்தது. இறுதிநாளான நேற்று காலை முதல் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம், பூப்பல்லாக்கில் நகர்வலம், இன்று காலை 5:00 மணிக்கு அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ