| ADDED : மே 24, 2024 03:36 AM
நத்தம்: -நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 13ல் துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. மறுநாள் காலை கணபதி ஹோமம் நடந்தது. சந்தனக் கருப்பு கோயிலிலிருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 17-ம் தேதி மதியம் அன்னதானம், மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், சந்தனகுடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்றிரவு அம்மன் மின் ரதத்தில் நகர் வலம் வந்தார். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன்,பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா உடப்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சந்திரன்,ராமநாதன், சுரேஷ்பாபு, ஆனந்தன்,கண்ணன் செய்திருந்தனர்.