தேசிய அறிவியல் தினம்
திண்டுக்கல்: ஸ்ரீ காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஒளி சிதறலைக் கண்டறிந்த சர்.சி.வி. ராமன் நினைவாக தேசிய அறிவியல் தினம் நடந்தது. பள்ளி செயளர் நரசிங்க சக்தி தலைமை வகித்தார். ராமலிங்கம், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.வி.எம்., கல்லுாரி கணித இணைப்பேராசிரியர் (ஓய்வு) ராமசந்திரன் பங்கேற்றார். பள்ளி மாணவர்களுடைய செய்முறை படைப்புகள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களிலும் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் இடம் பெற்றது. மாணவர்களின் படைப்புகளும் கண்காட்சியாக நடந்தது. படைப்புகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் அகிலன் ஏற்பாடு செய்தனர்.