வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சிலை உறுதியுடன் இருக்கும் போது பாதுகாப்பு கூட்டம் எதுக்காம்?
நவபாஷாண சிலையை சுத்தி ஒரு கண்ணாடி கூண்டு கடி, அப்புறம் கம்பி கூண்டு கட்டிறலாம். மூணு அடி கேப்பில் தான் குருக்களே பூஜை செய்யணும்.
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தலைமை அலுவலகத்தில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில்நடந்தது.பழநி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பு குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழுவின் ஆய்வு கூட்டம் நேற்று கோயில் அலுவலகத்தில் நடந்தது.நீதிபதி பொங்கியப்பன் கூறியதாவது: முருகன் நவபாஷாண சிலையை பாதுகாப்பது, வலுப்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இது வழக்கமான ஆய்வு கூட்டம் தான். இம்முறை ஐ.ஐ.டி.,யிலிருந்து வல்லுநர்கள் வந்தனர்.கடந்த முறை நடந்த சோதனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலை உறுதியுடன் உள்ளது என்றார்.குன்றக்குடி பொன்னம்பல அடிகள், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகள், கோவை குமரகுரு சுவாமிகள், சிவகங்கை பிச்சை குருக்கள், பழநி செல்வ சுப்பிரமணிய குருக்கள், வல்லுநர்கள் தட்சிணாமூர்த்தி, முருகையன், மனுசந்தனம், எம்.எல்.ஏ., செந்தில்குமார், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, முன்னாள் இணை கமிஷனர் நடராஜன் பங்கேற்றனர்.
சிலை உறுதியுடன் இருக்கும் போது பாதுகாப்பு கூட்டம் எதுக்காம்?
நவபாஷாண சிலையை சுத்தி ஒரு கண்ணாடி கூண்டு கடி, அப்புறம் கம்பி கூண்டு கட்டிறலாம். மூணு அடி கேப்பில் தான் குருக்களே பூஜை செய்யணும்.