உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்திற்கு வழிவகுக்கும் விளம்பர பதாகைகள் மெத்தனப் போக்கில் அதிகாரிகள்

விபத்திற்கு வழிவகுக்கும் விளம்பர பதாகைகள் மெத்தனப் போக்கில் அதிகாரிகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் மெயின் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் நிலையிலுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலா தலமான கொடைக்கானலில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள் தங்களை முன்னிலைப்படுத்த விளம்பரங்களை ரோட்டோரம் உள்ள டிராபிக் சிக்னல், வழிகாட்டும் பலகை உள்ள கம்பங்களில் தொங்க விடுகின்றனர். இவற்றின் உறுதியை அடிக்கடி சோதிக்க வேண்டும் என்பது உள்ளாட்சி அமைப்பு ,போலீசின் விதிமுறைகள் இருந்தப் போதும் பராமரிப்பின்றி அவ்வப்போது சாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றன . இது போன்ற நிலையில் இரு வாரத்திற்கு முன் கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட் அருகே விளம்பர பதாகையுடன் கூடிய டிராபிக் சிக்னல் விழுந்ததில் கொடைக்கானலை சேர்ந்த கூலித்தொழிலாளி தாஸ் பலியானார். உடன் வந்த சுரேஷ் காயமடைந்தார். இதை தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் விபத்தை ஏற்படுத்தும் நிலையிலுள்ள கம்பங்கள் , விளம்பர பாதகைகளை அகற்றியது. ஏரிச்சாலை சந்திப்பு , பி.எஸ்.என்.எல்., கலையரங்கம் பகுதியில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்படாமல் உள்ளது. பெருமாள்மலை பழநி சந்திப்பு பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் ரோட்டோர சிக்னல் கம்பங்களில் விளம்பர பதாகைகள் தொங்கிய நிலையில் உள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள விளம்பர பதாகை , சிக்னல் கம்பங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி