உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்துக்கு வழிவகுக்கும் பயணிகள் நிழற்குடை

விபத்துக்கு வழிவகுக்கும் பயணிகள் நிழற்குடை

பள்ளி நேரத்தில் நெரிசல்பழநி கான்வென்ட் ரோடு பகுதியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை செல்ல அனுமதிப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும். ராஜா, பழநி.........------சேதமான ரோடுதிண்டுக்கல் அருகே மாலப்பட்டி ரோட்டில் இருந்து பழைய இ.பி .ஆபிஸ் செல்லும் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்று உள்ளது . முக்கியமா இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி, திண்டுக்கல்..............--------வீணாகும் குடிநீர்ஆத்துார் சார் பதிவாளர் அலுவலகம் முன் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது.பலமுறை கூறியும் கண்டு கொள்ளாததால் திண்டுக்கல் செல்லும் குடிநீரில் பாதிப்பு ஏற்படுகிறது . உடைப்பை சரி செய்ய வேண்டும் .சதீஷ் ஆத்துார்..............---------நாய்களால் பாதிப்புபழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் ,குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பாசாரிகள் அப்பகுதியில் செல்ல அச்சப்படுகின்றனர் .இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகம், பழநி....................---------விபத்தில் நிழற்குடைகேசிபட்டி அருகே கடயமலை பயணிகள் நிழற்குடை சேதமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது . மழை நேரங்களில் அருகில் செல்ல பயணிகள் அச்சப்படுகின்றனர் .பயணிகள் பாதுகாப்பு கருதி நிழற்குடையை புதுப்பிக்க வேண்டும் முருகன், கள்ளக்கிணறு..............---------சாக்கடையில் கழிவுநீர் தேக்கம்பழநி திருஆவினன் குடி கோயில் வடக்கு வாசல் நுழையும் இடத்தில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி பல நாட்களாக நிற்பதால் துர் நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் மூக்கை பிடித்து சொல்லும் நிலை தொடர்கிறது . இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்ராஜ் பழநி...............--------சிரமத்தில் வாகன ஓட்டிகள்திண்டுக்கல் கரூர் ரோடு ரயில்வே பாலம் அருகே சர்வீஸ் ரோடு சேதமடைந்து வாகனங்களில் பயணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜேஷ் கண்ணன், திண்டுக்கல்..........-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை