| ADDED : மே 31, 2024 06:11 AM
பட்டிவீரன்பட்டி : மாநில டேபிள்டென்னிஸ் போட்டியில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை புரிந்தனர்.தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில் தர்மபுரியில் சென்னை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற மாநில டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் பள்ளி மாணவி மோனிஸ்ரீ 17 வயது பிரிவிலும், 15 வயது பிரிவில் தனன்யா 2ம் இடம் பெற்று வெள்ளி வென்றனர். 13-வயது பிரிவில் அக்ஷரா, ஆத்மிகா வெண்கலப்பதக்கம் பெற்றனர். பதக்கங்களை வென்ற மாணவிகள், பயிற்சியாளர்கள் மலர்வண்ணன், மணிகண்டனுக்கு பள்ளி தலைவர் கோபிநாத் பரிசு வழங்கினார். பள்ளி செயலர் பிரசன்னா, பள்ளி நிர்வாகிகள் முருகானந்தம், நிர்மல்ராஜீவ் .பள்ளி முதல்வர் ராம்குமார் உடனிருந்தனர்.