உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலங்கிய குடிநீரால் மக்கள் அச்சம்

கலங்கிய குடிநீரால் மக்கள் அச்சம்

பழநி : பழநி நகராட்சி, சுற்றுப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த அச்சம் அடைந்துள்ளனர்.பழநி நகராட்சி 33 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் மூலம் வழங்கப்படுகிறது. சில நாட்களாக நகராட்சி சப்ளையில் குடிநீர் பழுப்பு நிறத்தில் கலங்கலாக வருகிறது. பொதுமக்கள் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிப்பு செய்து வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் ஆயக்குடி பேரூராட்சியில் விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் விநியோகிக்கப்படுகிறது .இங்கும் பொதுமக்கள் அச்சத்துடன் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை