உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டியால் மக்கள் பரிதவிப்பு

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டியால் மக்கள் பரிதவிப்பு

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிதிண்டுக்கல் பாறைப்பட்டியில் தண்ணீர் தொட்டி சேதம் அடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். போர்வெல்லை சரி செய்து தண்ணீர் தொட்டியை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு. மாரிமுத்து, பாறைப்பட்டி.------அடிகுழாயால் ஆபத்துதிண்டுக்கல் பாரதிபுரம் கிழக்கு தெருவில் அடிகுழாய் பயன்பாடு இன்றி புதைந்து கிடைக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அடி குழாயை பயன்பாட்டிக்கு கொண்டுவர வேண்டும். கண்ணன், பாரதிபுரம்.-----ரோடு பள்ளத்தால் அச்சம்நத்தம் -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வேம்பார்பட்டி செல்லும் இணைப்பு ரோட்டில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டோர பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவண்ணன், கோபால்பட்டி.----பெயர் பலகையால் தடுமாற்றம்திண்டுக்கல் எம்.வி.எம். நகர் 3வது மெயின் ரோட்டில் பெயர் பலகை சேதமடைந்து அழிந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடுமாறுகின்றனர். பெயர் பலகையை புதுபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகதீஷ், திண்டுக்கல்.------தொற்று பரப்பும் கழிவுநீர்திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் 9வது வார்டு முதல் சந்து சத்தியமூர்த்தி புரத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தொற்று பரப்பும் நோய் பரவுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வா,திண்டுக்கல்.------குப்பையால் உருவாகும் சீர்கேடுதிண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியில் குப்பை பல நாட்களாக அள்ளாமல் உள்ளது. இதனால் குப்பைகள் அங்கும் இங்குமாய் சிதறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திரா,பாலகிருஷ்ணாபுரம்.--------கட்டமைக்காத சாக்கடைதாண்டிக்குடி எரு குத்திக்கல் முருகன் கோயில் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கட்டமைக்காமல் உள்ளது. இதனால் கழிவு நீர் தெருவில் செல்லும் அவலம் உள்ளது. ஊராட்சி சேதமடைந்த சாக்கடையை கட்டமைக்க வேண்டும். முருகன், தாண்டிக்குடி.-----.....................................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !