உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்......

புரோட்டா மாஸ்டர் பலிநிலக்கோட்டை: கோட்டூர் ஊராட்சி தாதகபட்டியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் குமரேசன் 48. இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். நால் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோதி இறந்தார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: கைதுவத்தலக்குண்டு: ஹிந்து அறநிலை துறை தமிழகத்தில் உள்ள கோயில்களை விட்டு வெளியேற வலியுறுத்தி வத்தலக்குண்டில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஹிந்து முன்னணி,பா.ஜ.,வினர் 25 பெண்கள் உட்பட 56 பேரை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர். நிலக்கோட்டையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.போலீஸ் ஸ்டேஷன் முற்றுகைவத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் மைனர் பெண் ஒருவர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக பிரச்சனைகள் நீடித்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதையில் ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். மைனர் பெண்ணை கடத்திய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தியும் போதையில் ரகளையில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தியும் 100க்கு மேற்பட்ட பெண்கள் வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் சிலைமணி நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.டூவீலர் மோதி மூவர் காயம்செந்துறை: செந்துறை திருநுாத்துப்பட்டி ஒத்தக்கடையை சேர்ந்தவர் அருளப்பன் 68. இவர் சத்துணவு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது உறவினரை பார்க்க செந்துறையிலிருந்து சொறிப்பாறைப்பட்டி நோக்கி டூவீரில் சென்றார். அப்போது மங்களப்பட்டி-புதுார் அருகே சிரங்காட்டுப்பட்டியை சேர்ந்த சாரதி 20, என்பவர் ஓட்டி வந்த டூவீலர் நேருக்கு நேர் மோதி அருளப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சாரதி 20, நாகராஜ் 17, ஆகிய இருவருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை