மேலும் செய்திகள்
தற்கொலை செய்தவர்கள் சேலம் தம்பதி
20-Feb-2025
திண்டுக்கல்: இறந்தவர் உடலை மீட்க சென்றபோது, அவர் உடல் அருகே இருந்த வெடி பொருட்கள் வெடித்ததில் போலீசார் இருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில், நேற்று முன்தினம் மதியம், 17வது கொண்டை ஊசி வளைவு பகுதி தனியார் நிலத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டனர்.அப்போது, அருகில் இருந்த பாறையை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி பொருட்களை பார்த்து பறிமுதல் செய்ய முயன்ற போது, அது திடீரென வெடித்தது. இதில், போலீசார் இருவர், வனத்துறையை சேர்ந்த ஒருவர் என, மூவர் காயமடைந்தனர். மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விசாரணையில், இறந்தவர், கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த சபூ, 65, என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் இறந்தது தெரிந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Feb-2025