மேலும் செய்திகள்
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
15-Aug-2024
திண்டுக்கல், : ஹாக்கி விளையாட்டு வீரர் தயான் சந்த் பிறந்தநாளை யொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான 100 மீ., ஓட்ட போட்டி,ஆண்கள் ,பெண்களுக்கான நடைப்போட்டி, நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு நடைபயிற்சி கழக தலைவர் சண்முகவேல் பதக்கம்,சான்றிதழ் வழங்கினார். மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி நடந்தது. 6 அணிகள் பங்கேற்றதில் புனித பிரான்சிஸ் சேவியர் மேல் நிலைப்பள்ளி அணி ஆண்கள்,பெண்கள் பிரிவில் முதல் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஹாக்கி கழக தலைவர் காஜாமைதீன் பதக்கம்,சான்றிதழ் வழங்கினார். காந்திகிராமம் பல்கலையில் கல்லுாரி மாணவர்களுக்கான 100 மீ., ஓட்ட போட்டி,கையுந்துப்பந்து போட்டிகள் நடந்தது. 9 அணிகள் பங்கேற்றதில் ஆண்கள் பிரிவில் காந்திகிராமம் பல்கலை அணி முதலிடம், பெண்கள் பிரிவில் பழனியாண்டவர் கல்லுாரி முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்,சான்றிதழ் வழங்கப்பட்டது.
15-Aug-2024