உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேடசந்துார்: குஜிலியம்பாறை ஆணைபட்டி கூலி தொழிலாளி வைரமணி 45. இவருக்கும் வேடபட்டிமாதவராஜாக்கும் 35, நிலம் தொடர்பான வழக்கு உள்ளது. இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட வைரமணி குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். வைரமணி ஜாதியை பற்றி பேசியதாக வைரமணி மீது மாதவராஜ் புகார் அளித்தார். குஜிலியம்பாறை போலீசார் வைரமணி மீது பி.சி.ஆர்., வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த, வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் மாநில அமைப்பு செயலாளர் ராஜா தலைமையில் ஆத்துமேட்டில் முறையாக விசாரிக்காமல் வழக்கு பதிவு செய்ததாக கூற குஜிலியம்பாறை போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ