உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் காந்திமார்க்கெட் பகுதி ரோட்டின் இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நிலையில், மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பிலிருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆவின் டீக்கடை ஒன்றை அகற்ற முயன்றபோது கடை நடத்துபவர்கள் நாங்களே மாலைக்குள் அகற்றி விடுகிறோம் என கூற அதை விட்டு அருகிலிருந்த முட்டை கடை,மாநகராட்சி கழிப்பறை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பழநி : பழநியில் சன்னிதி வீதி, அய்யம்புள்ளிரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தது. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சன்னிதி வீதியில் ஆக்கிரமித்து வைத்த தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்த பொருட்களை கடைக்காரர்களே அகற்றி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ