உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயில் ஓட்டல் அகற்றம்

பழநி முருகன் கோயில் ஓட்டல் அகற்றம்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் வின்ச் ஸ்டேஷன் மேல் தள பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஓட்டல் பொருட்களை அப்புறப்படுத்தியதால் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பழநி அடிவாரம் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் கோயில் நிர்வாகம், வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். கிரிவீதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.பழநி கோயில் வின்ச் ஸ்டேஷன் மேல் தளத்தின் அருகில் தனியார் கட்டுப்பாட்டில் 90 ஆண்டுகளுக்கு மேல் ஓட்டல் இயங்கி வருகிறது. நேற்று அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் ஓட்டலில் இருந்த பொருட்களை கோயில் ஊழியர்கள் வின்ச் மூலம் அடிவாரப் பகுதிக்கு கொண்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
ஆக 05, 2024 08:13

அது சரி கனிமொழி அக்கா நீங்க இங்க டிக்கெட் எடுத்தவர்கள் கூறிய பதிலை கேட்டீர்கள் அல்லவா அப்புறம் என்னா உங்களுக்கு பிரச்சினை ராகுல் காந்தியிடம் என்ன ஜாதி என்று கேட்டால் உங்களுக்கு பொத்துகிட்டு வருது, அவர் பல நேரங்களில் பலஜாதிகளை குறிப்பிட்டு நான் இந்த ஜாதிதான் என்கிறார் இந்தியாவில் ஜாதீய ரீதியாகத்தான் இட ஒதுக்கீடு உள்ளது அது இல்லாமல் எதுவும் இல்லை, உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் ஜாதி தெரியாமல் இருக்கலாம், நீட்டை எதிர்ப்பவர்கள் ஏன் தமிழ் நாட்டில் ஜாதி,மதம் கிடையாது எனவே குறிப்பிட்ட நாளில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் அரசு உதவிகள் அனைத்தும் அவர்களின் தகுதி அடிப்படையில் தான் வழங்கப்படும் என்று அவசர சட்டம் உங்கள் அண்ணனிடம் இயற்ற சொல்லுங்களேன்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ