உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 3 மாதமாக டிரான்ஸ்பார்மரில் பழுது; குடிநீர், மின் வினியோகத்தில் பாதிப்பு

3 மாதமாக டிரான்ஸ்பார்மரில் பழுது; குடிநீர், மின் வினியோகத்தில் பாதிப்பு

குஜிலியம்பாறை : ஆர்.கோம்பை ஊராட்சியில் மின் டிரான்ஸ்பார்மர் பழுதால் மூன்று மாதங்களாக மக்கள் போதிய குடிநீர் இன்றியும், மின் வினியோக பாதிப்பாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை ஊராட்சியில் உள்ள ஆர்.கே.களத்துார், கோம்பை வடக்கு பகுதி, இந்திரா காலனி, ஆனை கவுண்டன்பட்டியின் ஒரு பகுதி களத்துார் கோம்பை ரோட்டில் பி.எஸ்.என்.எல்., டவர் அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் விநியோகம் நடக்கிறது. இந்த டிரான்ஸ்பார்மரில் ஒன்று ஓராண்டுக்கு முன்பே பழுதடைந்து விட்டது. மற்றொன்று இரு மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. அருகில் உள்ள ஓடை பகுதி மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் விநியோகத்தை வழங்கி வருகின்றனர். இதனால் குடிநீர் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.வீடுகளுக்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குளிர்சாதனம் பெட்டி கூட இயங்காது மருந்து பொருட்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. ஆர்.கோம்பை ஊராட்சி தலைவர் மலர் வண்ணன் கூறுகையில், ''மின் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளோம். சரி செய்தால்தான் முறையான குடிநீர், மின் விநியோகம் செய்ய முடியும் ''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி