| ADDED : ஜூலை 15, 2024 05:34 AM
மின்பெட்டியால் அச்சம்பழநி திண்டுக்கல் ரோடு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் பெட்டி சேதமடைந்துள்ளது. இது தாழ்வாக உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் மின்பெட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புசாமி,பழநி.------குப்பையால் உருவாகும் சீர்கேடுதிண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்துள்ளது. பல நாட்களாக குப்பையை சுத்தப்படுத்தாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் சுற்றுசூழல் பாதிக்கிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், திண்டுக்கல்.------பயன்பாடில்லாத நடைபாதைஒட்டன்சத்திரம் நகராட்சி சின்னக்குளம் கரையில் அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாட்டிற்கு வராமல் புற்கள் முளைத்துள்ளது. இதனால் மக்கள் வெளியிடங்களுக்கு செல்கின்றனர். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம் ஒட்டன்சத்திரம்.-------தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்நத்தம் மூங்கில்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க வசதியின்றி தவிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மதுரை வீரன், மூங்கில்பட்டி.-------சேதமான தரைபாலம்திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மேற்கு பகுதி ரோட்டில் தரைபாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். பள்ளத்தை மூட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிந்து, திண்டுக்கல்.-------இளநீர் கூடுகளால் பரவும் கொசுக்கள்திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் இளநீர் கூடுகளை கொட்டுகின்றனர். இதில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகள் இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவேதா,திண்டுக்கல்.--------கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்திண்டுக்கல் முனியப்பன் கோயில் தெருவில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கலந்த குப்பை தேங்கியுள்ளது. பல நாட்களாக அப்படியே தேங்கியிருப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகுமார் திண்டுக்கல்.------