உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காவிரி குடிநீர் குழாயின் மீது ரோடு பணி; குழாய்கள் உடைந்து வெளியேறும் தண்ணீர்

காவிரி குடிநீர் குழாயின் மீது ரோடு பணி; குழாய்கள் உடைந்து வெளியேறும் தண்ணீர்

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை மெயின் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில் ரோட்டின் கீழ் காவிரி குடிநீர் குழாய் செல்வதால் பணியின் போதே அடிக்கடி குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.கரூர் காவிரி ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைத்து பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார் வழியாக வேடசந்துார் , ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. திண்டுக்கல், குஜிலியம்பாறை, கரூர் வழித்தடத்தில் இருவழி சாலையாக இருந்த மெயின் ரோடு தற்போது தொட்டணம்பட்டியிலிருந்து டி.கூடலுார் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியானது காவிரி நீர் குழாய் செல்லும் வழித்தடத்தின் மேற்பகுதியில் நடந்து வருகிறது. இதனால் ரோட்டில் ஆங்காங்கே அவ்வப்போது குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீரிட்டு வெளியேறுகிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.தொடர்ந்து குடிநீர் குழாய்கள் உடையும் நிலையில் ரோடு பணியை முடித்தாலும் இப்பகுதி மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அடுத்தடுத்து காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட ரோடு முழு சேதம் அடைய வாய்ப்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் தனி ஆய்வு செய்து பாதிப்பு இருக்கும் பட்சத்தில் காவிரி குழாயை தள்ளி அமைப்பதற்கான நிதியை அரசிடம் இருந்து பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த ரோடு அமைக்கும் பணி இப்பகுதி மக்களுக்கு நீண்ட காலத்திற்கு பயன்படும் திட்டமாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை