மணல் திருடியவர் கைது
ஆயக்குடி : பழநி ஆயக்குடி சட்டப்பாறை அருகே உள்ள ஓடையில் மணல் திருடப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் வந்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர், ஓடையில் மணல் அள்ளிய மணல் திருடிய புது ஆயக்குடியை சேர்ந்த அரவிந்தன் 27, காளிதாஸ் 30, அருணகிரி 27, மாதவன் 25 ஆகியோரை கைது செய்து ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.