உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உத்ரிய மாதா சர்ச்சில் சப்பர பவனி

உத்ரிய மாதா சர்ச்சில் சப்பர பவனி

சாணார்பட்டி: சாணார்பட்டி கொசவபட்டி உத்ரிய மாதா சர்ச் திருவிழா சப்பர பவனியில் ஏராளமான கிறிஸ்தவ பங்கேற்றனர். விழாவையொட்டி முன்னதாக ஜூலை 12ல் தினசரி நவநாளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 20 இரவு உத்திரமாதா மின் ரத ஊர்வலம் மேளதாள வாத்தியம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, வானவேடிக்கையுடன் நடந்தது. தொடர்ந்து நேற்று சர்ச்சிலிருந்து தொடங்கிய அன்னையின் சப்பர பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. வழி நெடுகிலும் பக்தர்கள் காணிக்கை வழங்கி பிரார்த்தனை செய்தனர். சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை