உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரையில் சரபேஸ்வரர் யாக பூஜை: ஜப்பான் நாட்டினர் பங்கேற்பு

வடமதுரையில் சரபேஸ்வரர் யாக பூஜை: ஜப்பான் நாட்டினர் பங்கேற்பு

வடமதுரை : வடமதுரை அருகே ஊராளிபட்டி திருவாடுதுறை மகா சன்னிதானம் சரபேஸ்வரர் பீடத்தில் உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு யாக பூஜையில் ஜப்பான் நாட்டினர் பங்கேற்றனர்.உலகில் தற்போது நடக்கும் போர், கால நிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் மாற இந்த சிறப்பு யாகம் நடந்தது. 108 வகை மூலிகை பொருட்களால் யாக குண்டத்தில் ஹோமம் வளர்த்தனர். ஒரு மாதமாக தமிழகத்தில் உள்ள சிவ பஞ்சபூத தலங்கள், அறுபடை வீடு முருகன் கோயில்கள் என ஆன்மிகப் பயணம் முடித்த ஜப்பான் நாட்டினர் பழநி வராகி கோயில், பூம்பாறை முருகன் கோயில், வடமதுரை ஊராளிபட்டி சரபேஸ்வரர் மடத்தில் நடந்த யாக பூஜைகளில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ