உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோவிலில் ஸ்கேனர் கருவி

பழநி கோவிலில் ஸ்கேனர் கருவி

பழநி:பழநி முருகன் கோவிலில் பக்தர்களின் உடமைகள் 'ஸ்கேனர்' வாயிலாக சோதனை செய்யப்படுகிறது.பழநி முருகன் கோயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல ஏற்கனவே அனுமதி இல்லை. இந்நிலையில் கைப்பைகளை சோதனை செய்யும் 'ஸ்கேனர்' ரூ.25 லட்சத்தில் வாங்கப்பட்டு உள்ளது. படிப்பாதை செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கேனரில் பக்தர்களின் உடைமைகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. டி.எஸ்.பி., தனஞ்செயன் கூறியதாவது: ''ஸ்கேனர் தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரோப்கார், வின்ச் ஸ்டேஷன் உள்ளிட்ட வழிகளிலும் அமைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ