உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உதவித்தொகை முறைகேடு: தலைமை ஆசிரியை கைது

உதவித்தொகை முறைகேடு: தலைமை ஆசிரியை கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, 54, அந்த பள்ளியில் பத்தாண்டுகள் பணிபுரிந்தார். அந்த காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகையில், 6 லட்சம் ரூபாயை அவர் முறைகேடு செய்தது விசாரணையில் தெரிந்தது.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, பழனி தாலுகா போலீசார் விசாரித்து விஜயாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ