உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சஷ்டி, கிருத்திகை வழிபாடு

சஷ்டி, கிருத்திகை வழிபாடு

திண்டுக்கல்: கிருத்திகை, சஷ்டியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு அலங்காரம் நடந்தது.கிருத்திகை, சஷ்டியை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். இரண்டும் ஒரே நாளில் வந்ததால் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ரயிலடி சித்திவிநாயகர் கோயிலில் உள்ள பாலசுப்பிரமணி, கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, பாதாள செம்பு முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில், சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தது. மாலை தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை