உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெரியகுளத்தில் வண்டல் மண் திருட்டு; நடவடிக்கை தேவை

பெரியகுளத்தில் வண்டல் மண் திருட்டு; நடவடிக்கை தேவை

குஜிலியம்பாறை, : குஜிலியம்பாறை பெரியகுளத்தில் அனுமதி இன்றி மண் அள்ளும் இயந்திரம் மூலம் 20க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.குஜிலியம்பாறை அருகே 80 ஏக்கரில் உள்ளது பெரியகுளம். 2023ல் தான் கூடுதல் செலவில் குளத்தைதுார்வாரி கரையை அகலப்படுத்தி அதில் கற்கள் பதித்து மழை காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில் முறையான அனுமதியின்றி மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு,20 க்கு மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண் திருட்டு நடப்பதாக இப்பகுதி மக்கள் புகார் எழுப்புகின்றனர். பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள கண்மாய் குளங்களில் விவசாயம், மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் அனுமதி சீட்டின் அடிப்படையில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் எந்தவித அனுமதியின்றி இரவு பகலாக மண்ணை கடத்தி செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.குஜிலியம்பாறை தாசில்தார் தமிழ்செல்வி கூறுகையில், ''கூகுள் மீட்டிங்கில் உள்ளேன். பிறகு பேசுகிறேன்'' என்றார். மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து வண்டல் மண் திருட்டை தடுக்க வேண்டும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை