உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இளம்பெண் தற்கொலை:ஆர்.டி.ஒ., விசாரணை

இளம்பெண் தற்கொலை:ஆர்.டி.ஒ., விசாரணை

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குளிப்பட்டியை சேர்ந்த சிவசாமிக்கும் 38, வடகாடு வண்டிப்பாதையை சேர்ந்த காளீஸ்வரிக்கும் 29, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.குடும்பப் பிரச்னை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்த நிலையில், காளீஸ்வரி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்துவந்தார். இருவாரங்களுக்கு முன்பு காளீஸ்வரி விஷம் குடித்தார்.ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன் தினம் இறந்தார். பழநி ஆர்.டி.ஒ., கிஷன்குமார் ,ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி