உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாயம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தாயம்மன் கோயில் கும்பாபிஷேகம்

எரியோடு: எரியோடு மணியகாரன்பட்டியில் விநாயகர், தாயம்மன், வீருநாகம்மன், எரததாத்தப்பன், கிருஷ்ணர், முனியப்ப சுவாமி கோயில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். இங்கு தொடர்ச்சியாக பெரிய கும்பிடு திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்