சாணார்பட்டி:திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு, 17, 19, 13 வயதில் மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு தாய் இல்லாத சூழலில், தந்தை மற்றும் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில், 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இரு வாலிபர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. காதலர்களுடன் அருகிலுள்ள கிராமத்து கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு, இரவில் அவர்கள் வீடு திரும்பினர்.அப்போது, தாடிக்கொம்பு சுற்று பகுதியை சேர்ந்த சரண்குமார், 21, வினோத் குமார், 26, சூரிய பிரகாஷ், 22, ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி சகோதரிகள், அவர்களின் காதலர்களை தாமரைக்குளம் பகுதிக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவர்களது நண்பரான பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பிரசன்ன குமார், 25, என்பவருடன் சேர்ந்து, காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டி போட்டு, அவர்கள் கண் முன்னே இரவு முழுதும் சகோதரிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.இது குறித்த புகாரின்படி, சாணார்பட்டி மகளிர் போலீசார் விசாரித்து, சரண்குமார், வினோத் குமார், சூர்யா பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பிரசன்னகுமாரை தேடி வருகின்றனர்.கைதான மூவரின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்து, போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பலாத்காரம் செய்ததை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், 'பலாத்காரம் செய்யப்பட்ட தகவலை வெளியே கூறினால், இந்த வீடியோவை பரப்பி விடுவோம்' என, சகோதரிகளை அவர்கள் மிரட்டியது தெரிய வந்தது. பிரசன்னகுமாரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.