மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இலக்கியக்களம் , பொது நுாலகத்துறை நடத்திய 11 வது புத்தகத்திருவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள், இலக்கியக்களத்தின்சார்பில் கலை பண்பாட்டு பயணமாக புதுக்கோட்டை சித்தன்னவாசல் சென்றனர். இணைச்செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். பேராசிரியர். மனோகரன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஜான் பிரிட்டோ துவக்கி வைத்தார். பொருளாளர் மணிவண்ணன் பேசினார்.முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் முருகன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், தங்கம் பாலசுந்தரி, வளர்மதி கலந்து கொண்டனர். துணைத்தலைவர் சுப்பையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை இலக்கியக்களம் துணைத்தலைவர் சரவணன் செய்தார்.
27-Jan-2025