உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடரும் ஆடு திருட்டு கண்டுக்காத போலீஸ்

தொடரும் ஆடு திருட்டு கண்டுக்காத போலீஸ்

வேடசந்துார் : குடப்பம், உசிலம்பட்டி ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து ஆடு திருட்டு நடப்பதால் சாதாரண ஏழை மக்கள் வெகுவாக பாதிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் ஆடு வளர்ப்பு தொழிலை விடும் நிலைக்கு வந்துள்ளனர்.குடப்பத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சக்திவேல் 45. இவரது வீட்டில் கட்டி இருந்த2 ஆடுகள் திருடு போனது. ஆவலக்கவுண்டனுாரில் 4 ஆடுகள் திருடு போனது. கூம்பூர் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் குடப்பத்தை சேர்ந்த பழனி வளர்த்து வந்த ஆடு ஒன்று நேற்று முன்தினம் திருடு போனது. அதே நாள் உசிலம்பட்டியைச் சேர்ந்த பட்டாணி சொந்தமான ஆடு ஒன்றும் திருடு போனது.குடப்பத்தை சேர்ந்த சமூக ஆர்வலர், இல.சக்திவேல் கூறியதாவது:எனது வீட்டில் கட்டியிருந்த2 சினையாடுகள் திருடு போனது. கூம்பூர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.தொடர் திருட்டு சம்பவத்தால் ஆடு வளர்ப்பதையே விட்டு விட்டேன்.குடப்பம், உசிலம்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஆடுகளை மட்டுமே நம்பி வாழும் மக்களின் நலன் கருதி ஆடு திருடடை முற்றிலுமாக ஒழிக்கவும், திருடு போன ஆடுகளை கண்டுபிடித்து தர மாவட்ட போலீஸ் நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை