மேலும் செய்திகள்
ஸ்ரீ சவுடேஸ்வரி அறக்கட்டளை பொன்விழா
24-Feb-2025
திண்டுக்கல் : தமிழ்தாத்தா உ.வே.சா., பிறந்தநாள், உலகதாய்மொழி தினம், சர்.சி.வி., ராமன் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.பி.ஜே., அப்துல்கலாம் சமூகநல அறக்கட்டளை, தமிழர் மாமன்றம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா நடந்தது. வேலாம்பட்டி அப்துல்கலாம் நற்பணிமன்ற செயலர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தமிழர் மாமன்ற தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் மருதைகலாம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வக்கில் கிரிபிரசாத், ஆத்துார் கூட்டுறவு கல்லுாரி நிர்வாக அலுவலர் கணேசன், தமிழ்நாடு காந்தி மன்ற தலைவர் ஜெயசீலன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சண்முகவேல், விவசாயம் காப்போம் பசுமைப்புரட்சி சமூகபணி இயக்கம் மாநில தலைவர் முருகேசன், உதவி பேராசிரியை ராமதிலகம், அறக்கட்டளை ஆலோசகர் முருகானந்தம் பங்கேற்றனர். நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜகணபதி நன்றி கூறினார்.
24-Feb-2025